திரு. தருமராசா ஞானகிரி

தருமராசா ஞானகிரி

தோற்றம்: 11 மே 1988 - மறைவு: 26 செப்டம்பர் 2025

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், அல்லாரை வடக்கு மீசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தருமராசா ஞானகிரி அவர்கள் 26-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், சங்கரத்தை வட்டக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்ற ராசாப்பாவின் பேரனும் வரதராசா, காலஞ்சென்ற பூலோகசுந்தரம் ஆகியோரின் மருமகனும், உமையம்மா, சரஸ்வதி ஆகியோரின் பெறாமனும் ஆவார்.

தருமராசா - காலஞ்சென்ற பாக்கியலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், சடாச்சரம் - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தனுசா (முன்னாள் ஆசிரியை - யாழ். வீரசிங்கம் மத்திய கல்லூரி, கிளி. பரந்தன் அ.த.க பாடசாலை) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஆருத், ஆதர்ஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குணதீபன் (புகையிரத நிலைய உத்தியோகத்தர் - யாழ்ப்பாணம் அவர்களின் பாசமிகு சகோதரனும்,

பிரிதர்சினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் - கோப்பாய்), கோகிலதாஸ் (அமெரிக்கா), இமையா (அமெரிக்கா), டினேசன் (கணக்காளர் - K.K.S பொலிஸ் தலைமை காரியாலயம்), அனுசா, சசிபன்  ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/09/2025 09:07)