திருமதி. துஸ்ஸாரா கண்ணதாசன்

துஸ்ஸாரா கண்ணதாசன்

தோற்றம்: 12 பெப்ரவரி 1987 - மறைவு: 31 டிசம்பர் 2022

யாழ். டச்சு வீதி, வீமன்காமம், தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கப்பம்புலம் சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட துஸ்ஸாரா கண்ணதாசன் அவர்கள் 31-12-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி, சந்திரகாந்தியம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

கண்ணதாசன் (சுவிஸ்) அவர்களின் அருமை மனைவியும்,

ரனுஜா (யா/ஸ்கந்தவரோதயா ஆரம்பப்பாடசாலை) அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற துஷ்யந், சுரேக்கா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மோகனா (அதிபர், யா/ஏழாலை வடக்கு அ.மி.த.க பாடசாலை), ஜனதா, லோகேஸ்வரன் ஆகியோரின் நேசமிகு மைத்துனியும்,

ரவிபாலா (பிரதேச செயலகம், சாவகச்சேரி) அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

அஷாந், அஷானி (யா/ஸ்கந்தவரோதயா ஆரம்பப்பாடசாலை) ஆகியோரின் அன்பு அத்தையும்,

டர்விகன் (B.B.C முன்பள்ளி- சுன்னாகம்) அவர்களின் பாசமிகு சித்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/01/2023 07:20)