திருமதி. துரை இராசமணி
தோற்றம்: 18 மார்ச் 1947 - மறைவு: 02 மார்ச் 2026
யாழ். இணுவில் மேற்கை பிறப்பிடமாகவும், கோண்டாவில் குமரகோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. துரை இராசமணி அவர்கள் 02-03-026 திங்கட்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருகளும்,
காலஞ்சென்ற துரை (பிரபல வர்த்தகர், டிக்கோயா) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சரவணபவன் (பவன்-வர்த்தகர்), தனராணி (சுவிஸ்), லயன். பிரணவச்செல்வன் (JP, Director of New Global Business Systems), அபிராமி அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தவமணி அவரர்களின் அன்புச் சகோதரியும்,
சதீஸ்கலா, பிரேமதாசன் (சுவிஸ்), கௌரி (Pharmacist), மணாளன் (Manager of North Power Electricals) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அருமைநாதன் (ஓய்வுநிலை உதவி அதிபர்), லிங்கநாதன் (கனடா) ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும்,
தர்மின் (சுவிஸ்), தர்சிகன் (சுவிஸ்), வைதீசன் (சுவிஸ்), நியந்தன் (கனடா), கஜானன் (North Power Electricals), நிலானி, நிசாயினி, துளசிகன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-03-2026 செவ்வாய்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் கோண்டாவில் குமரகோட்ட இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
