Mr. Thurailingam Malaimakan
(தம்ரோ (Damro) நிறுவன யாழ் கிளை பிரதான முகாமையாளர்)
Date of Birth: 19 March 1986 - Deceased: 12 October 2024
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, உரும்பிராய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைலிங்கம் மலைமகன் அவர்கள் 12-10-2024 சனிக்கிழமை அன்று இடம்பெற்ற விபத்தில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், துரைலிங்கம் (வைரவன்)-பிரேமா தம்பதியினரின் பாசமிகு மகனும்,
யோககுரு-ஜெயந்தி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
பிரதீபா அவர்களின் அன்புக் கணவரும்,
கவிஷ், ஆதிரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மலைமகள் (ஜேர்மனி), தமிழ்மகள் (பிரான்ஸ்), திருமகள் (இலண்டன்), திருமகன் (ஓமான்) ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
சந்தோஷ், சாருயா, சாரீசன், சரவன், கார்த்திகேயன், காயத்திரி, நைனிகா ஆகியோரின் அன்புமிகு மாமனாரும்,
சிந்துஜா (அவுஸ்திரேலியா), சதீஸ், வெள்ளி, வசந்தன் ஆகியோரின் பாசமிகு மச்சானுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் தீருவில் ஒழுங்கை, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, ஊறணி இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
தீருவில் ஒழுங்கை,
வல்வெட்டித்துறை. (காவல் நிலையம் அருகாமை)
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
