திரு. துரைலிங்கம் அருள்லிங்கம்
தோற்றம்: 30 அக்டோபர் 1981 - மறைவு: 28 அக்டோபர் 2026
யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. துரைலிங்கம் அருள்லிங்கம் அவர்கள் 28-10-2026 புதன்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைலிங்கம் (ஓய்வுபெற்ற பொறியியலாளர்) - வசந்தமலர் தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான தேவராசா - சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தயாளினி (ஆசிரியை - சித்தங்கேணி மாதர் முன்பள்ளி) அவர்களின் காதல் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சி.தர்மலிங்கம் - அன்னம்மா மற்றும் காலஞ்சென்றவர்களான பண்டிதர் அ.ஆறுமுகம் - அற்புதமலர் தம்பதியினர்களின் பேரனும்,
தாரணி (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, யாழ்ப்பாணம்), மாவீரர் தயாலிங்கம், சுகந்தலிங்கம் (பொறியிய லாளர்- நீர்ப்பாசனத் திணைக்களம்) ஆகியோரின் பாசமிகு அண்ணணும்,
அஜித்குமார் (வரி உத்தியோகத்தர், யாழ். மாநகர சபை, மாகாண சாரணர் ஆணையாளர்), கம்ஷாயினி (ஆசிரியை - கொழு. பம்பலப்பிட்டி இந்து மகளிர் கல்லூரி), மோகனாம்பிகை (சாரூஸ் உணவகம்), சுபதினி, சயந்தன் ஆகியோரின் மைத்துனரும்,
யதுஷன், மதுஷன் ஆகியோரின் பெரியப்பாவும்,
சாத்விகா, தர்மிகன், டிலான் ஆகியோரின் சித்தப்பாவும்,
கேஷான், கவின், நிலான், சாய்கவி, கமல் ஆகியோரின் மாமனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-10-2026 வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருவடிநிலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 75 318 8119
www.tamilthakaval.org
