Mrs. Thurainayagam Kanakambigai
Date of Birth: 23 May 1949 - Deceased: 10 August 2026
திருகோணமலை - அம்மன்நகர், கட்டைபறிச்சான் தெற்கு, பனிச்சங்குளம் வீதியைச் சேர்ந்த திருமதி. துரைநாயகம் கனகாம்பிகை அவர்கள் 10-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை - மாணிக்கம் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி - அழகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரஜனி, காலஞ்சென்றவர்களான ரவிராஜன், ரதிதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோகுலதாஸ் (ஆசிரியர்) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான யோகம்மா, மகேஸ்வரி, விசுவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நவரெட்ணராஜா (ஓய்வுநிலை அதிபர்) அவர்களின் பாசமிகு மைத்துனியும்,
ஸ்ரீகஜன், ஸ்ரீதர்சனா, ஸ்ரீதர்மிகா, சதுர்சன், பவித்திரா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் அம்மன்நகர், பனிச்சங்குளம் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 11-08-2026 செவ்வாய்க்கிழமை இறுதிக்கிரியைகளின் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் கட்டைபறிச்சான் இந்து மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
