திரு. துரைராசா யோகநாதன்
தோற்றம்: 28 மார்ச் 1943 - மறைவு: 18 ஜனவரி 2026
யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும்,இல- 29 அம்பாள் வீதி, கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைராசா யோகநாதன் அவர்கள் 18-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராசா - அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஞானசௌந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிறிதரன் (HNB,நெல்லியடி), கிரிசாந்தி, பாலகுமார் (HNB, வட பிராந்திய காரியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரணித்தா (ஆசிரியை - யாழ். ஓஸ்மானியா கல்லூரி), நவநீதன், யமுனா (தொழில் நுட்ப உத்தியோகத்தர் - தென்மராட்சி பிரதேச செயலகம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விபிசஜன், நிர்த்திகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான ராசதுரை, பரமேஸ்வரி, நேசம்மா, சண்முகநாதன் மற்றும் சோமசுந்தரம், தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் சத்தியசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-01-2026 செவ்வாய்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் இல- 29, அம்பாள் வீதி கொக்குவில் மேற்கிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
