திரு. துரைராஜா சுதர்ஷன்

துரைராஜா சுதர்ஷன்

தோற்றம்: 14 ஜூலை 1969 - மறைவு: 29 டிசம்பர் 2024

யாழ். கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா - இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைராஜா சுதர்ஷன் அவர்கள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், துரைராஜா (இளைப்பாறிய ஆசிரியர், பிரித்தானியா) - இராஜலட்சுமி (மணி ரீச்சர்- இளைப்பாறிய ஆசிரியர், பிரித்தானியா) தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் - பூரணம் (கனடா)  தம்பதியினரின் அன்பு மருமகனும்,

அமிர்தலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

மிதுன், மயுரன், பிரணயா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மஞ்சுளா (பிரித்தானியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

தங்கலட்சுமி (இலங்கை), பூபதி (புஸ்பம்-இலண்டன்), செல்வச்சந்திரன் (இலண்டன்), காலஞ்சென்ற செல்வமாணிக்கம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

தர்ஷிகா, கிறிஷோத், ரிதிஷா, அஸ்மிதா, அனிக்கா, தனிஷ், கிரிஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிதர்சன், தனுஷியன், காவியா, அரிசன், அனன்யா ஆகியோரின் பெரியப்பாவும்,

சிவலோகராஜா அவர்களின் அன்பு மைத்துனரும்,

தசாந்தினி, செல்வரஞ்சினி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,

சிவலோகநாதன், சர்வானந்தன், யோகானந்தன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

அரிகரன் (பிரித்தானியா), செல்வமுருகன் (பிரித்தானியா), வரதலட்சுமி (இலங்கை), பிரபாஜினி (கனடா), சுபாஜினி (கனடா) ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-01-2025 புதன்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் Tooting & Mitcham Community Sports Club (Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:30மணியளவில் Croydon Cemetery (Mitcham Rd, London CR9 3AT, United Kingdom) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/01/2025 05:00)