Mrs. Thurairasa Gneshwary
Date of Birth: 07 April 1943 - Deceased: 16 August 2026
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை - அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. துரைராசா ஞானேஸ்வரி அவர்கள் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை - ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம் - கண்ணம்மா தம்பதியினரின் மருமகளும்,
துரைராசா (ஓய்வு நிலை சுகாதார மேற்பார்வையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சுனித்தா, சுகிலா (ஓய்வு நிலை அதிபர்), சுகந்தினி (பிரான்ஸ்) ஆகியோரின் தாயும்,
கலாநிதி செ.ஞானராசா (ஓய்வு அதிபர்), கருணாகரன் (பிரான்ஸ்), சுதாகரன் (பிரான்ஸ்), அனுஜா வசந்தி ஆகியோரின் மாமியாரும்,
சுகந்தன் (உதவி பொறியியளாலர்), சுவர்ணா, சுகனியா, சுதர்சன், ஸர்வீனா (தாதிய உத்தியோகத்தர்), சஜிந் (தாதிய உத்தியோகத்தர்), ஜனகன் (டோக்கியோ சிமேந்து), நவீனன் (பொறியியலாளர் கட்டார்), ஈஸ்வரி ஆகியோரின் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
சுகேசன், டுசாலி. சூரியா. கயானா, யஸ்ரிதா, கேஸ்விதா, சுபீகா, அக்ஷயன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-08-2026 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணியளவில் அன்னாரது திருவுடல் அன்புவழிபுரம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
