திருமதி. துரைராசா நவநீதமலர்

துரைராசா நவநீதமலர்

தோற்றம்: 15 பெப்ரவரி 1956 - மறைவு: 20 ஜூன் 2025

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா - Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. துரைராசா நவநீதமலர் அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நல்லையா - மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும், 

செல்லையா - இலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

துரைராசா அவர்களின் அன்பு மனைவியும்,

கஜீவன், றஜீவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கஜலினி, அஜந்தினி, சாருகேஷன், சந்தோஷ், ஆதிரையன், ஆதினன், யதுர்சினி, கெளரி யதுர்சன், சிந்துஜன், லக்கீசன், கீர்த்திகன், கீர்த்தனா, டனுசன், தனுசியா, விதுஷியா, துவாரகா, துவாரகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அண்ணாதுரை, காலஞ்சென்ற சிவகடாச்சம், றஞ்சன்குமார், சந்திரகுமார், காலஞ்சென்ற கிருஸ்ணகுமார், சிவகுமாரி, காலஞ்சென்ற ஜெயக்குமார், வேல்குமார், நீலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருணாதேவி, காலஞ்சென்ற பிறேமா, அனுசாதேவி, சிவனேஸ்வரி, கவிதா, காலஞ்சென்ற புலேந்திரன், ரதிதேவி, விஜிதா, ஜெயக்குமார் பொன்னுத்துரை, காலஞ்சென்ற முத்தம்மா, முத்துசாமி, சின்ராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரசாந், பிரியங்கன், துஷியந்தன், பிரியங்கா, சிவப்பிரியா ஆகியோரின் பெரியம்மாவும்,

லக்‌ஷாயினி, பிரியஷாயினி, வெண்பா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-06-2025 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/06/2025 04:00)