Mr. Thurairasa Vasudevan

Thurairasa Vasudevan

Date of Birth: 09 January 1964 - Deceased: 08 September 2024

யாழ். கரவெட்டி நெல்லியடி N.C.C வீதி புதுவளவைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைராசா வாசுதேவன் அவர்கள் 09-09-2024 ஞாயிற்றுக்கிழமை தனது 60 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், துரைராசா-காலஞ்சென்ற லீலாவதி தம்பதியினரின் ஏக புதல்வனும், 

தயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஐங்கரன் (பொறியியலாளர்-இலண்டன்), விதுசன் (மருத்துவ பீட மாணவன்-இலண்டன்), நிகிதன் (உயர்தர வகுப்பு மாணவன்-இலண்டன்) ஆகியோரின் தந்தையும்,

வாசுகி-நித்தியானந்தன் (ஆசிரியர்-யா/விக்கினேஸ்வரா ஆரம்பப் பாடசாலை), காலஞ்சென்ற ரோகினி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

நித்தியானந்தன் (ஓய்வுநிலை அதிபர்) அவர்களின் மைத்துனரும்,

சாமந்தி (சித்த மருத்துவ உள்ளகப் பயிற்சி மாணவி-கைதடி சித்த ஆயுர்வேத வைத்தியசாலை) மாமனாரும்,

செல்வஞ்சோதி-பாலசிங்கம் (ஓய்வுநிலை ஆசிரியர்), உருத்திராவதி-சிவநாதன் ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

   அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/09/2024 04:00)