திரு. துரைச்சாமி ஆறுமுகதாசன்
(ஓய்வுபெற்ற இலங்கை புகையிரத இலாக்கா உத்தியோகத்தர்)
தோற்றம்: 06 மார்ச் 1949 - மறைவு: 23 டிசம்பர் 2022
யாழ். வட்டுக்கோட்டை வட்டு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி ஆறுமுகதாசன் அவர்கள் 23-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவராமலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருட்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
நவமணிதேவி, காலஞ்சென்ற பார்வதிதாசன், குகதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துசீதரா (கனடா), யோதீஸ்வரன்(பிரான்ஸ்), சஜிந்தா (பிரான்ஸ்), மஞ்சுளா (கனடா), லதீபா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தபோநாதன், வசுமதி, பங்குஜானந்தன், கோபிநாத், தனுசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திவிஸ்நாதன், டேனிக்காலட்சுமி, டியோரிக்கா, அகஷ்னா தேஜஸ்வினி, டியாசிகன், தருண், ஓமீஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஆனந்தநடராசா, காலஞ்சென்றவர்களான சிவானந்தன், தர்மபாலன் மற்றும் தவச்செல்வி, ரதிமதி, செந்தில்மதி, நகுலேஸ்வரி, சிவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
