திரு. துரைசாமி சக்திவேல்
தோற்றம்: 17 ஜனவரி 1953 - மறைவு: 10 செப்டம்பர் 2024
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், ஊரணியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைசாமி சக்திவேல் அவர்கள் 10-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசாமி-மாணிக்கரெத்தினம் தம்பதியினரின் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை-இராஜேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,
பாவானிதேவி அவர்களின் அன்புக்கணவரும்,
வசந்த (இலண்டன்), நிசாந்தி, வேணுநாதன் ஆகியோரின் தந்தையும்,
கிருபாகரன், சிவரஞ்சனி, டிசாந்தி ஆகியோரின் மாமனாரும்,
ருத்ரனின் பேரனும்,
தவமலர், முருகவேல் (இலண்டன்), பழனிவேல் (அவுஸ்ரேலியா), தங்கவேல், காலஞ்சென்ற வசந்தமல்லிகா, சரோஜினி, வெற்றிவேல், ஜெயகுலசிங்கம் (கனடா), காலஞ்சென்ற ஞானகுலசிங்கம் ஆகியோரின் சகோதரரும்,
தியானமூர்த்தி (சிவகாமி இரும்பகம்), மாணிக்கவாசகர் (கணேஷ்), சதாசிவம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரின் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
