Mr. Thuraisamy Sivalingam

(வைத்திய அதிகாரி, திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை)

Thuraisamy Sivalingam

Date of Birth: 29 April 1974 - Deceased: 09 October 2026

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. துரைச்சாமி சிவலிங்கம் அவர்கள் 09-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி - மனோன்மணி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பத்மநாதன் - கோகிலா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

கிரிஷாந்தி (சிரேஷ்ட உதவி நூலகர், திருகோணமலை வளாகம், கிழக்கு பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு கணவரும்,

சின்மயன் (திரு. இ.கி.ச கோணேஸ்வரா இந்துக் கல்லூரி), ஹிரண்மியா (திரு. ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவகுமார் (உரிமையாளர் - விசாகா வியாபார நிலையம், வவுனியா), வரதலஷ்மி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஆனந்தராசா (இலண்டன்), சுபாஜினி (ஆசிரியை - வவுனியா விவேகானந்தா கல்லூரி), கமலசரவணன் (பொறியியலாளர், சிங்கப்பூர்), கண்ணதாசன் (மிருக வைத்தியர்) ஆகியோரின் மைத்துனரும்,

சர்மிளா, கஸ்தூரி ஆகியோரின் உடன்பிறாவா சகோதரரும்,

அயூரன், அக்ஷயா, அமிர்தா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

கயூரன், கீர்த்திகா, அட்சரா, ஆர்ணியா, ஷகிந்தரா, தன்யா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 11-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இல- 46/3, திருஞானசம்பந்தர் வீதி, திருகோணமலையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் திருகோணமலை இந்து பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/10/2026 00:00)