திரு. துரைசாமி சிவசோதி

(ஓய்வுபெற்ற உப அதிபர் - பம்பலபிட்டி இந்து கல்லூரி, D.S. சேனநாயக்க வித்தியாலயம்)

துரைசாமி சிவசோதி

தோற்றம்: 09 பெப்ரவரி 1963 - மறைவு: 30 டிசம்பர் 2024

யாழ். காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைசாமி சிவசோதி அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று இரவு 10:30 மணியளவில் கொழும்பு போதனா வைத்தியசாலை இறைவனடி சேர்ந்தார்.

இவர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் ஆசிரியராகவும், D S சேனநாயக்க கல்லூரியில் உப அதிபராகவும், கொழும்பு இ்ந்துக்கல்லூரியில் பிரதி அதிபராக கடமை புரிந்துள்ளார் என்பதோடு இவர் ஓர் இரசாயனவியல் ஆசிரியர் என்பது குறிப்பிட தக்கது.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசாமி - இராசலட்சுமி தம்பதியினரின் அன்பு புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பிரபாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

விஷ்ணுகா, காண்டீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தேவராயகி, புவனேஸ்வரி, கணேசன், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சிவபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-01-2025  வியாழக்கிழமை அன்று காலை 8:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை பொரளை A.F. Raymond மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து  இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/12/2024 05:00)