Mr. Thuraisamy Sivasothy
(Retired Vice Principal -Bambalapitiya Hindu College)
Date of Birth: 09 February 1963 - Deceased: 30 December 2024
யாழ். காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைசாமி சிவசோதி அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று இரவு 10:30 மணியளவில் கொழும்பு போதனா வைத்தியசாலை இறைவனடி சேர்ந்தார்.
இவர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் ஆசிரியராகவும், D S சேனநாயக்க கல்லூரியில் உப அதிபராகவும், கொழும்பு இ்ந்துக்கல்லூரியில் பிரதி அதிபராக கடமை புரிந்துள்ளார் என்பதோடு இவர் ஓர் இரசாயனவியல் ஆசிரியர் என்பது குறிப்பிட தக்கது.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசாமி - இராசலட்சுமி தம்பதியினரின் அன்பு புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பிரபாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
விஷ்ணுகா, காண்டீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தேவராயகி, புவனேஸ்வரி, கணேசன், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சிவபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-01-2025 வியாழக்கிழமை அன்று காலை 8:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை பொரளை A.F. Raymond மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
