திரு. துரைச்சாமி சுந்தரலிங்கம்

(பிரபல வர்த்தகர் - ஶ்ரீரங்கன் ரேடிங் கம்பனி - 4ம் குறுக்குத்தெரு, கொழும்பு-11)

துரைச்சாமி சுந்தரலிங்கம்

தோற்றம்: 14 டிசம்பர் 1947 - மறைவு: 26 மே 2024

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைச்சாமி சுந்தரலிங்கம் அவர்கள் 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி-ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சிவசம்பு - புவ​னேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் அன்புக்கணவரும்,

அகிலன் (பல் வைத்தியர்), சுதர்சன் (பிரித்தானியா), சர்மிளா, சற்சொரூபன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

துவாராக (HNB), கார்த்திகா (வைத்தியர்-பிரித்தானியா), நிமலன் (Quantity Surveyor), சோபனா (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சேரன், மித்திரன், தாமரா, சர்வின், விவான், அதிரா, ஹர்ஷனா, அஷ்வித் ஆகியோரின் அன்புப் பேரனும்,

நாகபூசணி (ஆசிரியர்), கணேசலிங்கம் (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான சிவபூசணி, முத்துலிங்கம், சுபாஸ்கரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கமலரஞ்சனி (ஜேர்மனி), சிவனேஸ்வரன் (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான கிருஷ்ணன், குலசிங்கம் மற்றும் இராஜேஸ்வரி, சரோஜினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் 28-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் காலை 9.00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் முற்பகல் 11.00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:- 
128, அரசடி வீதி,
கந்தர்மடம், யாழ்ப்பாணம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/05/2024 04:00)