Mrs. Thuraisamypillai Pappu Ammal (Vijayalauxmy)

Thuraisamypillai Pappu Ammal (Vijayalauxmy)

Date of Birth: 05 June 1940 - Deceased: 25 May 2025

கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. துரைசாமிபிள்ளை பாப்பு அம்மாள் அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மா.மு.சிதம்பரம்பிள்ளை (தும்பரை) - காமாட்சி அம்மாள் தம்பதியினரின் மகளும்,

இந்தியா - திருச்சி மாவட்டம் காவேரிப்பட்டி கிராமம், மாத்துடையான் கோத்திரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற பெரியண்ணப்பிள்ளை - மூக்காயி அம்பாள் தம்பதியினரின் மருமகளும,

காலஞ்சென்ற துரைசாமிபிள்ளை (EMC Hardware) அவர்களின் அன்பு மனைவியும்,

பாலசுப்பிரமணியம் (EMC - ஹட்டன்), காலஞ்சென்ற ராஜ்குமார் (PLPR - பொகந்தலாவ), அமுதா (கொழும்பு), தனபாக்கியம் (கொழும்பு) ஆகியோரின் தாயாரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் (கொழும்பு), சிவலிங்கம் (சாந்தி மஹால் - கொழும்பு), சுபஶ்ரீ (ஹட்டன்), வசந்தி (பொகந்தலாவ) ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பெரியசாமிபிள்ளை (நாவலப்பிட்டி), சிவலிங்கம்பிள்ளை, முருகையாபிள்ளை மற்றும் சுந்தரலிங்கம் (நியோன் சென்டர் - கொழும்பு), காலஞ்சென்ற மாரியாயி அம்மாள் (கடுகஞ்சேனை), சுந்தரம்மாள் (நீர்கொழும்பு), பரமேஸ்வரி (கம்பளை), ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சுப்பையா (திருச்சி), செல்லம்மாள் (ராம்ஸ்வைட் - ஹட்டன்), தனலெட்சுமி (பொன்னேரி - இந்தியா), சரோஜா (அடைக்கம்பட்டி - இந்தியா) ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்பிள்ளை (மஸ்கெலியா), பெரியசாமிபிள்ளை (நோட்டன்), சப்பாணியாபிள்ளை (கொழும்பு), பெரியசாமிபிள்ளை (நோர்வூட்) ஆகியோரின் சம்பந்தியும்,

நிதூசன், உமேசிகா, சுபீகரன் ஆகியோரின் அப்பாயியும்,

துசிதா, கிஷாலினி, பிரசன்னா, கிரிஷித்தா ஆகியோரின் அம்மாயியும்,

புகழரசன், முகாஷினி, பவனியா ஆகியோரின் கொள்ளுப்பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-05-2025 திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் (இல - 167/4,1 ஆம் ஒழுங்கை, டிம்புள்ள வீதி, ஹட்டன்) இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-05-2025 புதன்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் கொட்டகலை கொமர்ஷல் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/05/2025 04:00)