Mr. Thuraisamyppillai Balasuntharam
Date of Birth: 08 June 1951 - Deceased: 17 September 2026
இந்தியா - திருச்சி மாவட்டம், திருமனூர் கிராமம், நல்லுடையான் கோத்திரத்தைச் சேர்ந்த திரு. பாலசுந்தரம் (ஆனந்தன் 4ம் குருக்குத்தெரு) அவர்கள் 17.09.2026 வியாழக்கிழமை அன்று அதிகாலை 03.30 மணியளவில் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைசாமிப்பிள்ளை - தெய்வானை அம்மாள் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற ஆலம்பட்டி சப்பானியாபிள்ளை - குஞ்ஞம்மாள் தம்பதியினரின் மருமகனும்,
ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. அபிராமி (சென்னை), அபீசன் (Latvia), மதுர்சன் (Little Spaces, கொழும்பு), ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. ஆனந்த் (சென்னை) அவர்களின் அன்பு மாமனாரும்,
சந்திரன் (ஹப்புத்தளை), ஜெயலெட்சுமி (ஹட்டன்), சுப்புலெட்சுமி, சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வீரையாபிள்ளை (ஐஸ்வர்யாஸ், கொழும்பு), ஜெகதீசன் (பண்டாரவளை), கமலாதேவி (பண்டாரவளை) ஆகியோரின் மாப்பிள்ளையும்,
தங்கவேல் பிள்ளையின் (குருதெனிய) மைத்துனரும்,
வையாபுரிபிள்ளையின் (அரவிந் டிரேடர்ஸ் பண்டாரவளை) சகலையும்,
சரஸ்வதியின் கொழுந்தனாரும்,
கலா, நாகராணி ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும்,
மனோஜ், துஸ்யந்தி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
பவித்ராவின் அன்பு மாமாவும்,
அகீராவின் அன்புத் தாத்தாவும்,
Prof. ஹரிஹரன் - சியாமலாதேவி (சென்னை) ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-09-2026 வியாழக்கிழமை அன்று மாலை 07.00 முதல் இல- 34/3, எலிஹவுஸ் வீதி, கொழும்பு 15 இல் அமைந்துள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 20-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் திருவுடல் மாதம்பிட்டிய இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
