திரு. துரைசிங்கம் சாந்தரூபன் (ரூபன்)

துரைசிங்கம் சாந்தரூபன் (ரூபன்)

தோற்றம்: 10 டிசம்பர் 1975 - மறைவு: 03 டிசம்பர் 2025

யாழ். நெடுந்தீவு கிழக்கினைப் பிறப்பிடமாகவும், வவுனியா - திருநாவற்குளத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைசிங்கம் சாந்தரூபன் அவர்கள் 02-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், துரைசிங்கம் - மேரி பிலோமினா (ரஞ்சி) தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற இலங்கநாதன் - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சிவரஞ்சினி (சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் - செட்டிக்குளம் பிரதேச செயலகம்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கிஷாந்தன், ஜனகன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

அன்ரன் லீனகே, பாக்கியநாதன், யசோமதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

சுமித்திரா, மகேஸ்வரி, நடராசா ஆகியோரின் மைத்துனரும்,

மனோரஞ்சினி, தயாரஞ்சினி, அழகரத்தினம், இலங்கரத்தினம், வேணி ஆகியோரின் மைத்துனரும்,

சிவசுப்பிரமணிம், கணேசலிங்கம், விஜயமாலா, சுதர்சன் ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-12-2025 புதன்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் இல- 392, திருநாவற்குளம், வவுனியாவில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/12/2025 00:00)