Mrs. Thushyanthi Mikunthan

(பேராசிரியை - யாழ். பல்கலைக்கழக விவசாய பொறியியல் பீடம்)

Thushyanthi Mikunthan

Date of Birth: 21 April 1964 - Deceased: 23 November 2025

யாழ். உசன், மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், இல- 49/4, மணல்தறை லேன், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. துஷ்யந்தி மிகுந்தன் அவர்கள் 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், 

கு.மிகுந்தன் (பேராசிரியர் - யாழ். பல்கலைக்கழக விவசாயபீடம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

அரவிந்தன், ரகுவிந்தன், வினோவிந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr. மிதுறிகா (Registrar, NCTH), Eng. துமிலன் (மென்பொறியியலாளர் -  WSO2), Dr. வக்‌ஷலன் (யாழ் வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

திவாகரன் (SR Nephrology - கொழும்பு தேசிய வைத்தியசாலை), மாதங்கி (விரிவுரையாளர் - கொழும்பு பல்கலைக்கழகம்), Dr. ஜோகினி (ஶ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-11-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் யாழ். பல்கலைக்கழகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/11/2025 00:00)