திருமதி துஷ்யந்தி சோமசுந்தரம்
மறைவு: 13 ஏப்ரல் 2022
யாழ்ப்பாணம் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும். கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி சோமசுந்தரம் அவர்கள் 13.04.2022 திகதியன்று விண்ணுலகம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சட்டத்தரணி அமரர் பாரிஸ்டர் அம்பலவாணர் (காரைநகர்) புவனேஸ்வரி(பூ அக்கா) (முன்னாள் உபஅதிபர்)தம்பதிகளின் ஏக புத்திரியும்,
கவிஞர் மாவை.சோமசுந்தரம்(அறநெறி ஆசிரியர்) அவர்களின் மனைவியும்,
மாவை.சண்முகபிரகாஷனின் பாசமிகு தாயாரும்,
ஆசிரியர் அமரர்.மாவை.விஸ்வலிங்கம் மீனாட்சி தம்பதிகளின் மருமகளும்,
சிவராசா கணேசா,சுபாஜி, கிரிஜா, கீதா ஆகியோரின் மச்சாளும்,
விக்னேஸ்வரி, புஸ்பநாயகி, அமரர் சண்முகசுந்தரம் ( வீரகேசரி) ஆகியோரின் பாசமிகு மைத்துணியும் ,
கணேசலிங்கம்,திரவியசெல்வம் மற்றும் வத்சலா அவர்களின் உடன் பிறவாத சகோதரியுமாவர்.
அன்னார் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் யாழ் இந்து மகளிர் கல்லூரியின் முன்னாள் மருத்துவ மாணவியும் மாவார்.
அன்னாரின் பூதவுடல் 17-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று Punchi Borella, Lanka Flourish எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பி.ப 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நிறைவுற்ற பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவிக்கிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
வீட்டு முகவரி:-
631/6 Baseline lane,
Dematagoda,
Colombo.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/04/2022 09:50)
