திரு. உலகநேசம் பிறேம்தாஸ் (பிறேம்)
தோற்றம்: 07 ஏப்ரல் 1961 - மறைவு: 20 ஆகஸ்ட் 2024
யாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. உலகநேசம் பிறேம்தாஸ் அவர்கள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், உலகநேசம்-பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
ரூபவதனா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரணவனின் பாசமிகு தந்தையும்,
குகதாஸ் (கனடா), கணேசலெட்சுமி (கலா), கணேசதாஸ் (லண்டன்), காலஞ்சென்றவர்களான விமலதாஸ், ரவீந்திராவதி ஆகியோரின் சகோதரரும்,
சாந்தகுமாரி, தெய்வேந்திரா, இந்திரா, யோகன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-08-2024 புதன்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
