Mrs. Umadevi Navaratnam

Umadevi Navaratnam

Date of Birth: 13 February 1930 - Deceased: 17 August 2024

யாழ். காரைநகர் வேதரடைப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. உமாதேவி நவரத்தினம் அவர்கள் 17-08-2024 சனிக்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா-ராசம்மா தம்பதியினரின் பாசமிகு புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-சிதம்பரம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சூரியகுமாரி, சிறீதரன், பத்மாசனி, மனோரஞ்சிதம், கங்காதரன், சித்திரா, முரளீதரன், சகிலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ரவீந்திரன், தனபாலன் மற்றும் ராஜேஸ்வரி, சர்வானந்தா, நரேந்திரன், மாலினி, சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சொரூபி, செந்தூரன், சரவணன், திவாகரன், கார்த்திகா, மாதவன், நர்மதா, அனந்தன், கோகுலன், அமிர்தா, ஆர்த்தி, பிரியங்கா, பிரவீணா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நிலானி, ரஜீவன், லோகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான சிவகாமசுந்தரி, சரஸ்வதி, பொன்னம்பலம், இரத்தினசபாபதி, சிவபாக்கியம், நடேசன் மற்றும் சிதம்பரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், நடராசா மற்றும் தையல்நாயகி, மார்க்கண்டு, ருக்மணிதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-08-2024 திங்கட்கிழமை அன்று மாலை 5.00-9.00 மணி வரையும், 20-08-2024 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.00-12.30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.30-2.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று,  பிற்பகல் 2.30 மணியளவில் புகழுடல் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/08/2024 04:00)