Mrs. Umamaheshwary Latshumanan

(Retired Vice Principal - St. Claire's College, Wellawatte)

Umamaheshwary Latshumanan

Date of Birth: 27 October 1939 - Deceased: 20 April 2024

திருகோணமலையயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. உமாகேஸ்வரி இலட்சுமணன் அவர்கள் 20-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தாா்.

அன்னார், காலஞ்சென்ற இலட்சுமணன் (வங்கியாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற திரு.திருமதி தியாகராஜா (தபால் அதிபர் - திருகோணமலை) அவர்களின் புதல்வியும்

இரமேஷ் (கனடா), இந்துமதி (NSB), காலஞ்சென்ற ராதிகா அவர்களின் அன்பு அன்னையும்,

யாழினி (கனடா), சசி மகேந்திரன் (நீதியரசர் - மேன்முறையீட்டு நீதிமன்றம்), மேகான் புவிமானசிங்கம் (கனடா) ஆகியோரின் மாமியும்,

அஞ்சு, நரேன், சசாங்கன், ஹரேன், இந்திரஜித், அம்ரிதா ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் புகழ் உடல் 23-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியிலிருந்து பார்வைக்காக கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, 24-04-2024 புதன்கிழமை அன்று பிற்பகல் 4.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/04/2024 04:00)