Mrs. Urukumani Devi Kamalathas

Urukumani Devi Kamalathas

Date of Birth: 20 August 1949 - Deceased: 05 August 2026

யாழ். வல்வெட்டித்துறை வித்தனை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும்,  Wellington - நியூசிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ருக்மணிதேவி கமலதாஸ் அவர்கள் 05-08-2026  புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பசுபதி - ரோகிணியம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆனந்தசிங்கம் - சர்வபாக்கியம் தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற கமலதாஸ் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சுகுமாரசாமி, இந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற இந்திரா, வதனா, மோகனதாஸ், கமலா, சிவதாஸ் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 7:00 மணி வரை Lychgate Funerals (No 7, Johnsonville Road, Wellington) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 10-08-2026 திங்கட்கிழமை காலை 9:30 - 12:30 மணி வரை Karori Cemetery (76 Old Karori Road, Wellington) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/08/2026 00:00)