Mrs. Uruthirarasa Jamuna
Date of Birth: 02 October 1955 - Deceased: 11 July 2026
மட்டக்களப்பு - குருமண்வெளியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. உருத்திரராசா யமுனா அவர்கள் 11-07-2026 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - பூரணம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஜோசப் - ராசமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற உருத்திரராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காயத்திரி, நிசாந்தன், ருசாந்தன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மொராஜிபாயினி (பொது முகாமையாளர் - கூட்டுறவு சங்கம் வவுணதீவு), ஹம்சலா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
திருச்செல்வம், காலஞ்சென்ற மகேஸ் (கிராம உத்தியோகத்தர்), துளசிராசா, காலஞ்சென்றவர்களான மனோகரன் (ஒப்பந்ததாரர்), மகேந்திரன், சந்திரன் மற்றும் திங்கள், மனோகி ஆகியோரின் சகோதரியும்,
ரஞ்சிதம், சோதிப்பிள்ளை (ஓய்வு பெற்ற ஆசிரியர்), ராணி, கமலாஜினி, வாணி, இராசமளி, அசோகன், தேவராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கரிஸ், ரித்திக், ஜருஸ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
ஷதுர்வசனா, நிவாசகன், கனிஷன், கேதுரி, கார்விகா, அருவி, ஆதித்தன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரது இறுதி நிகழ்வுகள் 16-07-2026 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை திமிலைதீவிலுள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் குருமன்வெளி இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, மாலை 4.00 மணியளவில் திருவுடல் குருமண்வெளி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
