திருமதி. உஸ்தீனாமா (செல்வமணி) பீலிக்ஸ்

உஸ்தீனாமா (செல்வமணி) பீலிக்ஸ்

தோற்றம்: 20 செப்டம்பர் 1930 - மறைவு: 16 செப்டம்பர் 2026

நிறைவாக வாழ்ந்த ஓர் வாழ்க்கை என்றென்றும் எங்கள் இதயங்களில் நிலைத்திருக்கும்.

"நல்லதும் உண்மையுமுள்ள ஊழியனே, நன்று செய்தாய்... உன் ஆண்டவருடைய மகிழ்ச்சியில் பிரவேசி." - மத்தேயு 25:21

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கண்டி, கொழும்பு, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. யூஸ்ரினம்மா பீலிக்ஸ் அவர்கள் 16-09-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான யாக்கோபி தியோகுப் பிள்ளை, அந்தோனியாபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பிலிக்ஸ் ஞானப்பிரகாசம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் - பிலிப்பா பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான அந்தோனி பிள்ளை, சவரிமுத்து, ஸ்டெல்லா ஆகியோரின் அன்பு சகோதரியும்,

லின்டா (அன்ரன்), நோயலா (ஜெயந்தா), அனிற்றா (கவுட்ஸ்), மறீற்றா (நிமால்), பெலிற்றா (பாலேந்திரா) அவர்களின் ஆருயிர்த் தாயாரும்,

நிறு (நிரோஷன்), தரன் (வாணா), பெராட் (லசிக்கா), திஷான், ரோஷல் (ஷத்து), மிஷால், வைஷ்ணவி (விக்) லக்ஸ்ணவி ஆகியோரின் பேத்தியும்,

வேணுவின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.00 - 9.00 மணி வரையும், 21-09-2026 திங்கட்கிழமை காலை 7.30 - 9.30 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave. Markham, ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10.00 மணியளவில் St. Rose of Lima Church (3216 Lawrence Avenue East Scarborough, ON MIH 1A4) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் Christ the King Catholic Cemetery (7770 Steeles Avenue East) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

தொடர்புகளுக்கு:

Anton (Thavam):- +1 416 885 0575
Linda:- +1 437 249 0499
Lucky:- +1 647 861 7028
Felita:- +1 416 258 7482
Marita:- +94 70 341 5343

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/09/2026 00:00)