Mr. V. Paranthaman
Date of Birth: 15 August 1942 - Deceased: 14 June 2025
யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பண்டிதர் வீரகத்திப்பிள்ளை பரந்தாமன் அவர்கள் 14-06-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வீரகத்திப்பிள்ளை - பார்பதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம் - பொன்னம்மா தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற சொர்ணாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
முல்லை (வைத்தியர் - பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை), பொன்முடி (ஆசிரியர் - யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்), அந்தணன், புலவன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
பரமேஸ்வரன் (ஆய்வு உத்தியோகத்தர் - உள்ளுராட்ச திணைக்களம், கைதடி), ராகவன் (தொழிற்றுறை மேம்பாட்டு அலுவலர்), பிறிஷானி (வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை) ஆகியோரின் மாமனாரும்,
கணியன், மாதுளன், சேந்தன், நிலவன், அங்கணன் ஆகியோரின் பேரனும்,
காலஞ்சென்ற சிறி அகிலாண்டதரநாதன், கிருஷ்ணவேணி, சிறி ஜெகரட்சகமூர்த்தி, சிறி அனாதரட்சகமூர்த்தி, சிறிஞானசுந்தரம், காலஞ்சென்ற சிறி வீரகனககுமார், கிருஷ்ராணி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-06-2025 காலை 8:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
முகவரி:-
"தமிழ் வளர்சோலை"
புலோலி தெற்கு, புலோலி.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
