Mr. Nadarajaha Vignarajaha
Date of Birth: 18 July 1945 - Deceased: 08 October 2024
யாழ். அளவெட்டி பெருமாக்கடவையைப் பிறப்பிடமாகவும், கெலன்ஹடுவ பிளேஸ், 1 சப்பல் லேன், வௌ்ளவத்தை, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா விக்கினராஜா அவர்கள் 08-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா-அன்னபூரணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற விசுவநாதர்-பாக்கியலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற நிர்மலாதேவி அவர்களின் அன்புக்கணவரும்,
பிரசன்னா, சுரேஷ் ஆகியோரின் அன்புத்தந்தையும்,
பிருந்தா, ஓர்லி (Aurelie) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரணவ், யாதவ் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 12-10-2024 சனிக்கிழமை முற்பகல் 10.30 மணி முதல் மாலை 6.00 மணி வரையும், 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையும் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
