Mr. V.K. Selvaraj

V.K. Selvaraj

Deceased: 01 February 2026

இந்தியா - திருச்சி மாவட்டம் பெருமாள் பாளையம் கிராமம், இராகலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. V.K. செல்வராஜ் அவர்கள் 01-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.20 மணியளவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கருப்பையா பிள்ளை - மீனாட்சி அம்மாள் தம்பதியினரின் அன்பு புதல்வனும்,

காலஞ்சென்ற தேவராஜ் பிள்ளை - நாகரத்தினம் தம்பதியினரின் மருமகனும்,

ருக்மணி (சகுந்தலா) அவர்களின் அன்பு கணவரும்,

ஶ்ரீகாந்தன், உமேஷ்காந்தன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

அஸ்வினி, லங்காணி ஆகியோரின் மாமனாரும்,

விஜயலக்‌ஷ்மி (திருச்சி), காலஞ்சென்ற மகேஸ்வரன், பாலசுப்ரமணியம் (New Asian), கணேசன் (திருச்சி) ஆகியோரின் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான சந்திரன், ஶ்ரீதரன் மற்றும் செல்வராஜ் (Jeyasri), மோகன் (SMK, கலஹா) ஆகியோரின் சகலையும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரம், சண்முகம் மற்றும் தேவராஜ் (திருச்சி) ஆகியோரின் மாப்பிள்ளையும்,

ராமநாதன் (New Barath Metal) - சந்திரலேகா, Dr. மெர்வின் சிகுராஜபதி - அம்பபாலி ஆகியோரின் சம்பந்தியும்,

சாந்தி, அமராவதி, விஜி ஆகியோரின் கொந்தனாரும்,

கஸ்தூரி, சரோஜினி நிர்மலா, தெய்வானை ஆகியோரின் கொழுந்தனாரும்,

சரோஜா அவர்களின் உடன்பிறவா சகோதரனும்,

தியாஷ், அன்விக ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,

கோபி (திருச்சி), பிரபா ஆகியோரின் மாமாவும், 

நவீன், ராகமீனா, தர்ஷினி, கிருஷ்ணா, திலுக்‌ஷி, மிவக்‌ஷி ஆகியேராின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-02-2026 திங்கட்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் இல- 38/1, சஹாரா ரோட், கொழும்பு-04 இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/02/2026 00:00)