Prof. V. Sutharsan

(Surgeon - Jaffna Hospital)

V. Sutharsan

Date of Birth: 06 January 1976 - Deceased: 15 August 2025

யாழ். அச்சுவேலி தம்பாலையைப் பிறப்பிடமாகவும், ஞானவைரவர் வீதி, கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல வைத்திய கலாநிதி. வெங்கடாசலம் சுதர்சன் அவர்கள் 15-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வெங்கடாசலம் - கமலாதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கமலநாதன் - மங்கையற்கரசி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காயத்ரி அவர்களின் அன்புக் கணவரும்,

சேந்தனா, ஜனந்தனன், தனுஜனன் ஆகியோரின் பாசமிக்கதந்தையும்,

திவாகர், செந்தூரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

திர்சான், பிரபாஜினி, சுபத்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் திருவுடல் கோண்டாவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/08/2025 04:00)