Mrs. V. Parameswary
Date of Birth: 22 February 1950 - Deceased: 22 August 2024
நுவரெலியா-டிக்கோயா, இல-454/2, பாடசாலை வீதியை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. வ. பரமேஸ்வரி அவர்கள் 22-08-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ந. ஆறுமுகம் (பாலன் டெக்ஸ்-டிக்கோயா) அவர்களின் அன்பு மனைவியும்,
அமிர்தகுமர், கலைவாணி (ஆசிரியை-சென் கெப்ரியல் கல்லூரி, ஹட்டன்), ஶ்ரீபிரியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அழகுருசாமி (முகாமையாளர், ஆசிரியர்- வாண்மை விருத்தி நிலையம், நுவரெலியா), நவனீதன் (ஆர்த்திஷா டெக்ஸ்டைல், கொழும்பு), அம்ஷா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-08-2024 வௌ்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் கொட்டகலை, கொமர்ஷல் தகன சாலையில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
