Mr. Vadivelu Radhakrishnan

(முன்னாள் முகாமையாளர் - ரொபேட் ஏஜென்சி)

Vadivelu Radhakrishnan

Date of Birth: 07 December 1948 - Deceased: 27 October 2024

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனை, வௌ்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வடிவேலு இராதாகிருஷ்ணன் அவர்கள் 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு-அழகம்மா தம்பதியிரின் அன்பு புதல்வரும், 

காலஞ்சென்ற சுபோதினி அவர்களின் அன்புக்கணவரும்,

சஞ்சீவன், அரவிந்தன் ஆகியோரின் அன்பு தந்தையும்,

சிவலதா, வைஸ்ணவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹரிஷ், அருவி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 29-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-10-2024 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.   

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/10/2024 04:00)