திருமதி. வடிவாம்பாள் சீவரத்தினம்
தோற்றம்: 09 பெப்ரவரி 1937 - மறைவு: 11 டிசம்பர் 2024
கொழும்பு அவிசாவளையைப் பிறப்பிடமாகவும், கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வடிவாம்பாள் சீவரத்தினம் அவர்கள் 11-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராமகிருஷ்ணன்-முத்துலக்ஷ்மி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா-பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா சீவரத்தினம் (Accountant) அவர்களின் அன்பு மனைவியும்,
மாலினி (இலங்கை/கனடா), உதயராணி (இங்கிலாந்து), சந்திரமோகன் (ஜேர்மனி), சுந்தரராஜன் (பிரான்ஸ்), இந்திரா (கனடா), யோகராஜ் (இங்கிலாந்து), சுரேஷ்குமார் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகராஜா, நடராஜா, ரேணுகா, சந்திரவதனா, ஸ்ரீசுந்தர், செல்வினி, சசிகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விமலரத்தினம் (மணி) அவர்களின் அன்புச் சகோதரியும், அருந்ததி அவர்களின் அன்பு மைத்துனியும்,
ஜனனி, ரூபினி, மயூரி, காயத்ரி, வினுஜா, ரம்யா, ரிஷாந்தினி, வினோதினி, சிவாஹினி, நிவேதன், கோகுல், சௌமியா, பிரியங்கா, நிவேதா, மதுசன், தனுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஷியாம், ஹரிஷ், ஹாஷினி, கிஷான், அஞ்சனா, கதிர், கிருஷ்னி, துவாரக், ரிஷிக், ஜான்வி, யாத்ரன், தீரன், விஹான், ரியா, தியா, அர்ஜுன், லியா, அஞ்ஞான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 14-12-2024 சனிக்கிழமை அன்று முற்பகல் 09:00 மணி முதல் பிற்பகல் 06:00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று, பிற்பகல் 02:00 மணியளவில் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
