திருமதி. வடிவாம்பிகை மனோகரன்
தோற்றம்: 25 மே 1939 - மறைவு: 20 மே 2026
அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. வடிவாம்பிகை மனோகரன் அவர்கள் 20-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லய்யா - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், செல்லத்துரை - மேரியம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
அபிமன்யு (பிரபு), முகுந்தன் (மனோ/ஜீவா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நாராயணி, சுஜாந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஹரிஷ், அரண், அக்ஷரா, திரிஷா, கவிண் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
காலஞ்சென்ற குணநாயகம், தருமநாயகம் மற்றும் இன்பநாயகம், தங்கவேலாயுதம், பாலசுப்பிரமணியம், நடேசபிள்ளை, கமலாம்பிகை, யோகாம்பிகை, பாலமோகன், பிரேமகாந்தன் மற்றும் வாசுகி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள் 24-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10 மணி முதல் 12:30 மணி வரை Castlebrook Garden Chapel, Castlebrook Memorial Park (712/746 Windsor Rd, Rouse Hill NSW 2155) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
