திருமதி. வடிவாம்பிகை (கிளி) தங்கராஜா
மறைவு: 11 ஜூலை 2025
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, முள்ளியவளை, வவுனியா, UK ஆகிய இடங்களை வசிப்பிடங்களாகவும் கொண்டிருந்த திருமதி. வடிவாம்பிகை தங்கராஜா அவர்கள் 11-07-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை Birmingham இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கரவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேதவனம் கந்தையா (இளைப்பாறிய மலாயன் புகையிரதசேவை அதிகாரி) - லட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,
உடுப்பிட்டியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான இளையதம்பி - சீதேவி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தங்கராஜா (இளைப்பாறிய அதிபர் - வித்தியானந்தக் கல்லூரி, முள்ளியவளை, உதவிக் கல்விப் பணிப்பாளர் - முல்லைத்தீவு) அவர்களது அன்பு மனைவியும்,
முகுந்தன், கலைவாணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுதர்சினி, முருகுசெழியன் ஆகியோரது அன்பு மாமியாரும்,
அட்ச்சரன், நேத்திரன், ஆயகி, சாயகி ஆகியோரது அன்புப் பேத்தியும்
காலஞ்சென்றவர்களான மனோன்மனியம்மாள், நடராஜா (சிங்கப்பூர்), தியாகராஜா (மலேசியா), நாகராஜா (இளைப்பாறிய பிரதி கல்விப்பணிப்பாளர் - வவுனியா), தர்மராஜா(இளைப்பாறிய உப அதிபர் - வித்தியானந்தக் கல்லூரி, முள்ளியவளை), கனகராஜா (சுவிஸ்), ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-07-2025 ஞாயிற்றுகிழமை காலை 9:30 - 1:30 மணி வரை Barnet Football Club Amber Lounge The Hive (Camrose Ave, London HA8 6AG) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் Hendon Cemetery & Crematorium (Holders Hill Road, London NW7 1NB) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
