Mrs. Vadivambigai Thangarajah

Vadivambigai Thangarajah

Deceased: 11 July 2025

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, முள்ளியவளை, வவுனியா, UK ஆகிய இடங்களை வசிப்பிடங்களாகவும் கொண்டிருந்த திருமதி. வடிவாம்பிகை தங்கராஜா  அவர்கள் 11-07-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை Birmingham இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கரவெட்டியைச் சேர்ந்த  காலஞ்சென்றவர்களான வேதவனம் கந்தையா (இளைப்பாறிய மலாயன் புகையிரதசேவை அதிகாரி) - லட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,

உடுப்பிட்டியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான இளையதம்பி - சீதேவி  தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தங்கராஜா (இளைப்பாறிய அதிபர் - வித்தியானந்தக் கல்லூரி, முள்ளியவளை, உதவிக் கல்விப் பணிப்பாளர் - முல்லைத்தீவு) அவர்களது அன்பு மனைவியும்,

முகுந்தன், கலைவாணி ஆகியோரின் அன்புத் தாயாரும், 

சுதர்சினி, முருகுசெழியன் ஆகியோரது அன்பு மாமியாரும்,

அட்ச்சரன், நேத்திரன், ஆயகி, சாயகி ஆகியோரது அன்புப் பேத்தியும்

காலஞ்சென்றவர்களான மனோன்மனியம்மாள், நடராஜா (சிங்கப்பூர்), தியாகராஜா (மலேசியா), நாகராஜா (இளைப்பாறிய பிரதி கல்விப்பணிப்பாளர் - வவுனியா), தர்மராஜா(இளைப்பாறிய உப அதிபர் - வித்தியானந்தக் கல்லூரி, முள்ளியவளை), கனகராஜா (சுவிஸ்), ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-07-2025 ஞாயிற்றுகிழமை காலை 9:30 - 1:30 மணி வரை Barnet Football Club Amber Lounge The Hive (Camrose Ave, London HA8 6AG) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் Hendon Cemetery & Crematorium (Holders Hill Road, London NW7 1NB) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/07/2025 04:00)