Mr. Vadivel Ganesh Ilango Chettiyar

Vadivel Ganesh Ilango Chettiyar

Date of Birth: 30 September 1959 - Deceased: 01 April 2025

கொழும்பு-12 இல-144, ஶ்ரீமத் பண்டாரநாயக்க மாவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வடிவேல் கணேஷ் இளங்கோ அவர்கள் 01-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயம்பெருமாள் வடிவேல் - பாப்பம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கிருஷ்ணசாமி - புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பிரியதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

மகாஷ்காந்தன், சண்வதீசன், வித்யாதக்‌ஷினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

முருகேஷ், வரதராஜன், காலஞ்சென்ற ஶ்ரீனிவாஸ், சிவாநந்தன் (ஐக்கிய அமெரிக்கா), மஞ்சுளா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-04-2025 வியாழக்கிழமை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/04/2025 04:00)