திரு. வடிவேல் கனகராஜ் ஆச்சாரி
தோற்றம்: 15 டிசம்பர் 1952 - மறைவு: 18 மார்ச் 2025
பண்டாரவளையைப் பிறப்பிடமாகவும், பம்பரகம இல-68/1, 2/1 ஜோசப் டயஸ் மாவத்தை, கொழும்பு - 15 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வடிவேல் கனகராஜ் ஆச்சாரி அவர்கள் 18-03-2025 செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.40 மணியளவில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வடிவேல் ஆச்சாரி - அமிர்தத்தம்மாள் தம்பதியினரின் மகனும்,
காலஞ்சென்ற ராமையா ஆச்சாரி - மாணிக்கத்தம்மாள் தம்பதியினரின் மருமகனும்,
கமலவேணி அவர்களின் அன்புக் கணவரும்,
நிலோஷன், சஷிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஐஸ்வர்யா, துஷ்யந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தஷ்னவி, கவினுஜன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி ஆச்சாரி, தியாகராஜா ஆச்சாரி மற்றும் நடராஜா ஆச்சாரி, சரஸ்வதி, மீனாம்பாள், சரோஜா ஆகியோரின் சகோதரரும்,
செல்வராஜ் ஆச்சாரி, அன்பரசன் ஆச்சாரி, ரவிச்சந்திரன் ஆச்சாரி, சதாசிவம் (சதீஷ்) ஆச்சாரி, தங்கராஜ் ஆச்சாரி ஆகியோரின் மச்சானும்,
பூங்கொடி, கனகேஸ்வரி ஆகியோரின் மாமாவும்,
மகேஸ்வரன் ஆச்சாரி, லெட்சுமணன் ஆச்சாரி ஆகியோரின் சகலையும்,
காலஞ்சென்ற செல்வராஜா ஆச்சாரி - ரேணுகா, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஆச்சாரி - மல்லிகாதேவி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-03-2025 புதன்கிழமை மாலை 5.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 20-03-2025 வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
