திரு. வடிவேல் பரமசிவம்

வடிவேல் பரமசிவம்

தோற்றம்: 04 மே 1963 - மறைவு: 26 மே 2026

நீர்கொழும்பு கடற்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், தளுபத்தை இன்ரசீட் தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வடிவேல் பரமசிவம் அவர்கள் 26-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்​.

அன்னார், விக்கினேஷ்வரி (ஓய்வுபெற்ற ஆசிரியை - நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி) அவர்களின் பாசமிகு கணவரும்,

சசிகலா, பிரபு ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-05-2026 புதன்கிழமை முதல் W.F Fenando (Ave Mariya Hospital Junction) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-05-2026  வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/05/2026 00:00)