திரு. வயிரமுத்து குணநாயகம்

வயிரமுத்து குணநாயகம்

தோற்றம்: 01 ஏப்ரல் 1956 - மறைவு: 28 மே 2026

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா - மொன்றியலை (Laval) வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வயிரமுத்து குணநாயகம் அவர்கள் 28-05-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரு.திருமதி. வயிரமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,

குகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

துவாரகா, கௌசிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வேதநாயகம், புனிதம், மோகன் ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4:00 - 9:00 மணி வரையும், 01-06-2026 திங்கட்கிழமை காலை 9:00 - 11:00 மணி வரையும் Aeterna Funeral Complex and Crematorium (55 Gince Street, Saint-Laurent, QC H4N 1J7) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/05/2026 00:00)