திரு. வைரமுத்து மகாலிங்கம்

(ஓய்வுபெற்ற அதிபர்)

வைரமுத்து மகாலிங்கம்

தோற்றம்: 01 மார்ச் 1937 - மறைவு: 05 ஆகஸ்ட் 2024

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. வைரமுத்து மகாலிங்கம் அவர்கள் 05-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 87 ஆவது வயதில் கனடாவில்  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பாக்கியம் [ஓய்வுபெற்ற ஆசிரியர்] அவர்களின் அன்புக் கணவரும்,

கருணாகரன், சுதாகரன், மதனாகரன் [கணித ஆசிரியர்], தமயந்தி, குமுதினி ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12.00-4.00 மணி வரையும், 12-08-2024 திங்கட்கிழமை காலை 7.30-8.30 வரையும் Capital Funeral Home & Cemetery (3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/08/2024 04:00)