Mr. Vairamuthu Subramaniyam
Date of Birth: 04 December 1938 - Deceased: 24 September 2025
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைரமுத்து சுப்பிரமணியம் அவர்கள் 24-09-2025 புதன்கிழமை அன்று ரொறன்ரோ, கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வைரமுத்து - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், குமாரசாமி - இராஜலட்சுமி தம்பதினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நவநீதம்மா (பூசணி) அவர்களின் அன்புக் கணவரும்,
ரவிச்சந்திரன், மனோச்சந்திரன், சுரேஷ்சந்திரன் (சூட்டி), குணபாலச்சந்திரன் (சந்தி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரேவதி, ஷோபனா, அனுஷா, உஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புவனேஸ்வரி, நாகேஸ்வரி, மஹேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
கார்த்திகேசு, கதிரவேலு, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிரோசன், இளங்கோ, அபிராமி, ஆதவன், ஆதிரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 29-09-2025 திங்கட்கிழமை காலை 8:00 - 9:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
www.tamilthakaval.org
