திரு. வைரமுத்து திரவியம்
தோற்றம்: 10 ஜூலை 1953 - மறைவு: 22 அக்டோபர் 2021
யாழ் ஆவரங்கால் சர்வோதய வீதியைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த, எமது சன சமூக நிலைய மூத்த உறுப்பினரும் சர்வோதய விளையாட்டுக்கழகத்தின் முன்னாள் கரப்பந்தாட்ட மற்றும் உதைபந்தாட்ட வீரருமான திரு வைரமுத்து திரவியம் அவர்கள் 22.10.2021 அன்று காலமானார்.
அன்னார் அமரர்களான வைரமுத்து இலட்சுமி தம்பதியரின் மூத்த மகனும்,
தி. நாகேஷ்வரியின் அன்புக் கணவரும்,
எமது ஒன்றிய உறுப்பினரான வை.இரத்தினசிங்கம் (கணேஸ்), எமது நிலைய முன்னாள் உறுப்பினரான சிவராசா பாக்கியலீலா (கிளி - அமரர்) மற்றும் நிலைய உறுப்பினர் ரவிச்சந்திரன் புஷ்பலதா ஆகியோரின் சகோதரரும்,
தி. கபிலன், தி. தீபிகா ஆகியோரின் அன்புத் தந்தையாரும் ஆவார்.
அன்னாரின் பிரிவையிட்டு துயரடைந்துள்ள அன்னாரின் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் இறைவனை வேண்டுகின்றோம்.
ஆவரங்கால், சர்வோதய வெளிநாட்டு அபிவிருத்தி ஒன்றியம்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/10/2021 11:19)
