திருமதி. வைரவநாதன் சுகிர்தராணி
தோற்றம்: 03 மார்ச் 1945 - மறைவு: 23 ஜனவரி 2025
ஈழமணித் திருநாட்டில் புங்குடுதீவு 09ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Berlin - ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வைரவநாதன் சுகிர்தராணி அவர்கள் 23-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேலு - சின்னத்தங்கம் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா - இரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற வைரவநாதன் அவர்களின் அன்புத் துணைவியும்,
கேமலதா, அஜந்தா, சுதர்ஜனி, எல்லாளன், சுபாசினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிறிதரன், ஜெயலிங்கம், பாஸ்கரன், துஷியந்தி, ஜெயக்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற விமலாதேவி, பாலரெட்ணம் (கொழும்பு), காலஞ்சென்ற மரகதமணி, வீரசுப்பிரமணியம் ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும்,
காலஞ்சென்ற பத்மநாதன், சண்முகநாதன், சிவநாதன், குணவதி, திலகவதி, புனிதவதி, காலஞ்சென்ற கனகரெட்ணம், மகேஸ்வரி, காலஞ்சென்ற சிவானந்தராஜா, உமாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆராதனா, நிதர்சன், அர்ச்சனா, ஆஹனா, அஸ்வின், எழிலன், அதிசியா, அதிஷ், அபினா, அபிஷா, ஆகாஸ், அபினாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-02-2025 புதன்கிழமை முற்பகல் 11.15 - 2.00 மணி வரை Feierhallen Krematorium Ruhleben (Am Hain 1, 13597 Berlin, Germany) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
முகவரி:-
Zehrensdorfer Str.
10A, 12277 Berlin, Germany.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
