Mr. Vairavippillai Manickam

Vairavippillai Manickam

Deceased: 08 December 2025

யாழ். உபயகதிர்காமம், புலோலி தெற்கை பிறப்பிடமாகவும் மெலிஞ்சியளவை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைரவிப்பிள்ளை மாணிக்கம் அவர்கள் 08-12-2025 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவிப்பிள்ளை - வல்லாத்தை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற இராமலிங்கம் (பொலிஸ்) அவர்களின் அன்பு அண்ணனும்,

தங்கம்மா அவர்களின் அன்பு கணவரும்,

நவரட்ணராஜா (நவம்), நவநீதராணி (ராணி), சிறிஸ்கந்தராஜா (சிறி), சுப்புரமணியராஜா (சுப்ரம்) ஆகியோரின் அன்பு தந்தையும்.

யாமளவி, கோகுலன், றிசான், ஆரணி, குபேரன், மயூரி, கஜானி, இளஞ்செல்வன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிகிரிகைகள் 11-12-2025 வியாழக்கிழமை காலை 8:00 மணியளவில் புலோலியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/12/2025 00:00)