Master. Vaishna Thirunavukkarasu
(யாழ் இந்துவின் மைந்தன்)
Deceased: 16 August 2026
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வன். திருநாவுக்கரசு வைஷ்ணா அவர்கள் 16-08-2026 ஞாயிற்றுக்கழமை திடீர் சுகவீனம் காரணமாக இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் - மனோன்மணி தம்பதியினர், காலஞ்சென்ற கதிர்வேலு - பார்வதி தம்பதியினர்களின் அன்புப் பேரனும்,
திருநாவுக்கரசு - கவிதா தம்பதியினரின் தவப் புதல்வரும்,
அஞ்சனாவின் பாசம் நிறைந்த அன்பு சகோதரனும்,
முருகேந்திரன் - கேதினி தம்பதியினரின் ஆசை மிகு மருமகனும்,
புண்ணியபாலன் தமயந்தி, சந்திரபாலன் தேவரதி, கதிர்வேலு யோகேஸ்வரன் ஆகியோரின் மருமகனும்,
கோணேஷ்வரன் லலிதா தேவி, ஜேசீலன் ஊசாந்தினி தம்பதிகளின் அன்பு பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-08-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அரசடி வீதி, கந்தர்மடத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் மயானத்தில் அரனார் அடியில் தீயில் சங்கமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 857 7656
+94 77 625 8285
+94 76 703 6509
www.tamilthakaval.org
