Mr. Vairavi Gunaratnam

(மீராம்பாள் ரான்ஸ்போர்ட் - உரிமையாளர் (Meerambal Transport))

Vairavi Gunaratnam

Date of Birth: 06 July 1956 - Deceased: 09 July 2026

யாழ். கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், செல்லத்துரை வீதி, சங்கரத்தையை வசிப்பிடமாகவும் தற்போது கொல்லங்கலட்டியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. வைரவி குணரத்தினம் அவர்கள் 09-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவி - இராசம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும், நடராசா - சித்திரவல்லி தம்பதியினரின் மருமகனும்,

செல்வலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

மீராம்பாளின் அன்புத் தந்தையும்,

செந்தூரனின் (ஆசிரியர் - மாதகல் சென். ஜோசப் மகா வித்தியாலயம்) மாமனாரும்,

தஷ்விதன், தட்ஷிகன் (மாணவர்கள் - மகாஜனாக் கல்லூரி, தெல்லிப்பளை) ஆகியோரின் பேரனும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, கந்தசாமி மற்றும் தங்கரத்தினம், காலஞ்சென்ற இரசதுரை, கனகேஸ்வரி, காலஞ்சென்ற நவரத்தினம், செல்வரத்தினம், இராஜேஸ்வரி ஆகியோரின் சகோதரனும்,

காலஞ்சென்ற சிவபாக்கியலக்சுமி, மகாலக்சுமி, சரவணபவன், காலஞ்சென்றவர்களான சண்முகவேல், அற்புதவேல், விஜயலக்சுமி மற்றும் தனலக்சுமி, முத்துக்குமார் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-07-2026 திங்கட்கிழமை அன்று காலை 08.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்பொன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/07/2026 00:00)