Mr. Vaitheeswaran Sivasubramaniam
(ஓய்வுபெற்ற அழகியல் பாட உதவிக்கல்விப் பணிப்பாளர், இராமநாதன் நுண்கலைப்பீட முன்னாள் சித்திரப்பாட வருகை விரிவுரையாளர், பிரபல ஓவியர்,சிற்பி, அட்டைப்பட வடிவமைப்பாளர்)
Date of Birth: 03 August 1942 - Deceased: 29 December 2025
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, கல்வியங்காடு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்தீஸ்வரன் சிவசுப்பிரமணியம் அவர்கள் 29-12-2025 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தீஸ்வரன் - மங்கையற்கரசி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் - கமலாச்சி தம்பதியரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்வராணி அவர்களின் அன்பு கணவரும்,
ராகுலன், பிரணவன், ஞானசுகாதிபன், உமாரமணன், சேரலாதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மாலதி, பாரதி, கிருபா, கிருஸ்ணவேணி, டிலூசி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வினுஜன், பாணுஜன், ஆருஜன், ஹரிணியா, ஆர்த்திகன், கவினன், வியனன், மயுசன், நெருசன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தசிவம், விக்கினேஸ்வரன், ரகுநாயகம், பராசக்தி, சிறிராமச்சந்திரன், ஜெகதீஸ்வரன், ரதி, ரஜனி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 31-12-2-0254 புதன்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் G.P.S. விளையாட்டரங்க வீதி கல்வியங்காடில் நடைபெற்று தகனக் கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு மகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
